அந்தச் சூரியன்
மூழ்கிவிட்டது
கடல்தாண்டிப்போகவுமில்லை
அடவி வழியே பதுங்கிய படி
நீள்தூரம் கடக்கவுமில்லை
நீரில் மூழ்கியவாறு தீ கரையேறிய நாளில்
நிலத்தில் பதுங்கிக் கொண்டு புயல்
முற்றவெளிக்கு வந்த நாளில்
ஆகாயத்தின் அருகுகளினூடாகப் புறப்பட்ட இடியோசைகள்
தலைக்கு மேலாக மையம் கொண்ட நாளில்
சூரியன் உன்மத்தங்கொண்டு
அலையத் தொடங்கியது
சூரியன் உருவாக்கிய நகரங்கள்
அஞ்சிய படி சிதறியோடத்தொடங்கின
அது வளர்த்த பயிர் நிலங்கள்
கருகத் தொடங்கின
ஆகாயமெங்கும் தீப்பிடித்த பொழுதில்
சூரியனி்ன் பிரகாசம்
மெல்ல மெல்ல
வடியலாயிற்று
யாரும் சென்றடைய முடியாத ஏரியொன்றில்
கடைசியாக அது
மறைந்து கொண்டிருந்தது
நீர்ப்பரப்பில் உதிரத்தைக் கரைத்தபடி
சூரியன் செத்துப்போன நிலத்தை
ஊழியின் பெருமழை நனைத்தது
அது உருவாக்கிய பட்டினங்களில்
நிரந்தர இருள் படியலாயிற்று
2010.02.28
நன்றி: மறுபாதி (இதழ் -4) சித்திரை - ஆனி 2010
11 comments:
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
மிக அருமையான கவிதை. பல மாதங்களுக்குப் பிறகு எழுதியிருக்கிறீர்கள்..இவ்வளவு இடைவெளி வேண்டாம்..அடிக்கடி எழுதுங்கள் சகோதரி.
மிக அருமையான கவிதை. பல மாதங்களுக்குப் பிறகு எழுதியிருக்கிறீர்கள்..இவ்வளவு இடைவெளி வேண்டாம்..அடிக்கடி எழுதுங்கள் சகோதரி.
உண்மை
பேரிணவாதத்தின் கொடுரங்களின்
குறியிடுகள் அறுமை!
மீண்டும் ஒரு நல்ல கவிதை!
வாழ்த்துக்கள்!
Very nice one...depicting the solitude and agony as well....great...
வாருங்கள் ரிஷான்,
"இவ்வளவு இடைவெளி வேண்டாம்..அடிக்கடி எழுதுங்கள் சகோதரி"
:(
:(
:(
பானையில் இருந்தால் தானே அகப்பையில் .......
வாருங்கள் nidurali அவர்களே,
ரிஷான் கருத்தை வழிமொழிந்த தங்களுக்கும் அதே......
வாருங்கள் Rafiq,
"பேரினவாதத்தின் கொடூரங்களின்
குறியிடுகள்"
இதனைவிடவும் சிறப்பாக எழுதப்பட்ட ஈழக்கவிதைகள் உள்ளன. அவற்றையும் படியுங்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாருங்கள் shammi,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
It's a beautiful poem with deep meaning.Even I have composed a poem on suset in English.Sunset always brings sadness to my mind when I assciates it with death especially with my beloved parents and generally the miseries and agonies of entire human community.
Keep up your talents and continue writing.
Knowledge sharer
வாருங்கள் Anony,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அழகான கவிதை ஃபஹீமா...
அபூ ஃபஹத்....
www.anbudanfahad.blogspot.com என் கிறுக்கல்கள்...
Post a Comment