நீ வராத பகற்பொழுதில்
படிந்துள்ள புழுதியைக்
கிளப்பியவாறு
ஆட்டுக் குட்டியுடன்
திரும்பிச் செல்கிறேன்
நீ வராத மாலை நேரத்தில்
கூடு திரும்பும் மைனாக்களின்
பாடல்களையெல்லாம்
வயல்வெளியில் விட்டுவிட்டு
கதவுகளை மூடிக் கொள்கிறேன்
நீ வராத இருளில்
பதுங்கிக் கிடக்கும்
வலிகளைப் போக்கிடவென்று
தீபமொன்றை ஏற்ற முனைகிறேன்
நீ வராத வசந்த காலத்தில்
இலைகளும் பூக்களும் உதிர்ந்து
நிழல் வற்றிப் போன
என் மரத்தடியில் கிடந்து
முகங்கவிழ்ந்து விம்முகிறதொரு
நெடுங்கனவு
2010.08.17
(நன்றி: கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ் -2011 )
4 comments:
அன்பின் சகோதரி,
//நீ வராத வசந்த காலத்தில்
இலைகளும் பூக்களும் உதிர்ந்து
நிழல் வற்றிப் போன
என் மரத்தடியில் கிடந்து
முகங்கவிழ்ந்து விம்முகிறதொரு
நெடுங்கனவு//
அருமையான கவிதை. இப்படி குறைந்தபட்சம் மாதமிரண்டு கவிதைகளாவது தந்தால் என்னவாம்? :-)
அன்புள்ள ரிஷான்,
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் எனறு நன்றிகள்.
நீ வராத பகற்பொழுதில்
படிந்துள்ள புழுதியைக்
கிளப்பியவாறு
ஆட்டுக் குட்டியுடன்
திரும்பிச் செல்கிறேன்
நீ வராத மாலை நேரத்தில்
கூடு திரும்பும் மைனாக்களின்
பாடல்களையெல்லாம்
வயல்வெளியில் விட்டுவிட்டு
கதவுகளை மூடிக் கொள்கிறேன்
நீ வராத இருளில்
பதுங்கிக் கிடக்கும்
வலிகளைப் போக்கிடவென்று
தீபமொன்றை ஏற்ற முனைகிறேன்
நீ வராத வசந்த காலத்தில்
இலைகளும் பூக்களும் உதிர்ந்து
நிழல் வற்றிப் போன
என் மரத்தடியில் கிடந்து
முகங்கவிழ்ந்து விம்முகிறதொரு
நெடுங்கனவு////
///
///
///
சில மாதங்களாக என் மனைவி என்னிடம் சொல்லி புலம்பும் வார்த்தைகள்
அனைத்தும் கவிதைகள் ஆகியிருக்கின்றன.அதிலும் இதை ( நீ வராத இருளில்
பதுங்கிக் கிடக்கும்
வலிகளைப் போக்கிடவென்று
தீபமொன்றை ஏற்ற முனைகிறேன்)
அவள் மொழியில் அப்படியே என்னிடம் கூறி இருக்கிறாள்
ஆச்சர்யமாகவும் அற்புதமாகவும் இருக்கிறது.
வாருங்கள் tamilraja,
"சில மாதங்களாக என் மனைவி என்னிடம் சொல்லி புலம்பும் வார்த்தைகள்
அனைத்தும் கவிதைகள் ஆகியிருக்கின்றன"
:-)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment