சகோதரனே! நானறியாப் புலன்களையெல்லாம்
உணர்வுகளில் பதித்துச் செல்பவனே
எந்த மனிதன் உனது கீதங்களைத் திருடிச் சென்றான்?
கை கட்டி வாய் பொத்திக் கண்மூடி நின்று சுழலென
எந்த மனிதன் உனை நிறுத்திப் போனான்?
கட்டாயமானதொரு தருணத்தில்
காலம் உனைப் பாலைநிலத்திலிருந்து பெயர்த்துவந்து
போர் ஓய்வுகொண்ட
தாய்நிலந்தன்னில் விட்டுப் போயிற்று
அவர்கள் குழி தோண்டிப் புதைக்கும்
உண்மைகளையெல்லாம்
எடுத்தோதும் பணியொன்றைத்
தெய்வம் உன்னிடம் தந்தகன்றது
எமது எழுதுகோல்களையெல்லாம் உன் வசம் விட்டுத்
திசைகள் எட்டிலும் காத்திருக்கலானோம்
எழுதும் பெயர் எதுவாயினும்
உனதெழுத்து அதுவே என்பதை
மனதின் நாவுகள் அதிர்ந்ததிர்ந்து உள்ளுணர்வில் பறையும்
செம்பிறைக் கொடிகள் என் மனவெளியெங்கும்
படபடத்துப் படபடத்துப் பறந்தோயும்
பிறப்பிலும் இறப்பிலும் வரும் பெருநாட்களிலும்
வானில் பிறையெழுந்து எமைத் திசைப்படுத்தும்
செம்பிறை போல் நீயும் சகீ
எமை வழிகூட்டிச் செல்வாய் என
உலமாக்களும் பெரியோரும்
பல்லாண்டுத் துயில் விட்டு எழுந்திடவே இல்லை
பள்ளிவாயில்களில் கேட்கும் பிரசங்கங்களில்
சிலந்திவலைகள் தொங்கிக் கிடக்கின்றன
நல்லதோ கெட்டதோ எனத் தெரியாத கோபங்களோடு
மரணத்தின் தலைவாயில் வரைக்
கூட்டி வந்து விடப்பட்டவர் நாம்
எனதபிமானத்தை வென்றவனே!
நம் தேச எழுச்சியில் உன் பாடல் கேட்டிடவும்
இளைஞர் அணியோடு உன் பாதம் பயணித்திடவுமாய்
நண்பர்களோடு நானும் அவாவி நிற்கிறேன்
நன்றி: எங்கள் தேசம்
18 comments:
அன்பின் ஃபஹீமாஜஹான்,
என்ன சொல்வது? வழமைபோலவே அருமையான கவிதை. இப்பொழுதிருக்கும் மனநிலையில் எனக்கெனவே எழுதப்பட்டது போல உள்ளது. :-)
மிகவும் நன்றி அன்புச் சகோதரி !
தமிழ்ப்பெண்கள் : பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை Center for Tamil Female Bloggers www.tamilpenkal.co.cc
உங்கள் இன்று முதல்முறையாக படித்தேன், நண்பரே மீகவும் அருமை.
அருமை ........
உலமாக்களும் பெரியோரும்
பல்லாண்டுத் துயில் விட்டு எழுந்திடவே இல்லை
பள்ளிவாயில்களில் கேட்கும் பிரசங்கங்களில்
சிலந்திவலைகள் தொங்கிக் கிடக்கின்றன
நல்லதோ கெட்டதோ எனத் தெரியாத கோபங்களோடு
மரணத்தின் தலைவாயில் வரைக்
கூட்டி வந்து விடப்பட்டவர் நாம்
அருமை அருமை .......
இதுதான் நான் விரும்பும் கவிதை . மார்ககமும் வழிகாட்டுடலும் இன்கு இரூக்கின்றது
நன்றி
இதுதான் நான் விரும்பும் கவிதை . மார்ககமும் வழிகாட்டுடலும் இன்கு இரூக்கின்றது
நன்றி
அருமை அருமை ....
நான் விரும்பியது , மார்க்கமும் வழிகாட்டுதலும் இதில் உண்டு. தங்களுக்கு இறைவன் உயர்வான பதவிகளை நன்மையை வழங்குவானாக! ஆமீன்
அன்புடன்,
முஹம்மது அலீ
அருமை வாழ்த்துக்கள்
பயனுள்ள நல்ல கவிதை. மார்க்கமும் வழிகாட்டுதலும் இதில் உண்டு .நன்றி
ரிஷான்:
//என்ன சொல்வது? வழமைபோலவே அருமையான கவிதை. இப்பொழுதிருக்கும் மனநிலையில் எனக்கெனவே எழுதப்பட்டது போல உள்ளது. :-)//
ஆமான்னு நினைக்கிறேன்.
நல்ல கவிதை. வாழ்த்துகள்
அன்பு சகோதரி பஹிமா ஜஹான்,
நண்பர் ரிஷான் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பாசமும் சில சமயம் எனக்குள் கொஞ்சம் பொறாமை எண்ணத்தையும் தோற்றுவிக்கின்றது. ஏக இறைவனின் கருணையும், உங்களின் அளவில்லாத அன்பும் நண்பர் ரிஷானுக்கு என்றும் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்பதே என்னுடையபிரார்த்தனை.
வாருங்கள் ரிஷான்,
இது பல வருடங்களுக்கு முன்பு (சுமார் 6 -7வருடங்கள்)எழுதப்பட்ட கவிதையொன்று.
இது உங்களது மனநிலைக்கும் இசைவாகிப் போனமை குறித்து எனக்கும் மகிழ்ச்சி.
நன்றி.
வாருங்கள் மச்சவல்லவன்,
முதன் முறையாக வந்துள்ளீர்கள்.
கருத்தையும் பதிந்துள்ளீர்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி.
நன்றி. உலவு.காம்
வாருங்கள் nidurali அவர்களே,
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
வாருங்கள் ஆடுமாடு,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாருங்கள் பி.ஏ.ஷேக் தாவூத்,
இந்தக் கவிதை பல வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட கவிதை.
இங்கு யுத்த நிறுத்தம் காணப்பட்ட காலத்தில் எழுதப் பட்டது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒரு சகோதரருக்கு எழுதியது. அவரது எழுத்துக்களை இப்போது காண முடியவில்லை.சிறப்பாக எழுதிக் கொண்டிருந்தவர். பல நல்ல படைப்புக்களை மொழி பெயர்த்து இங்கு அறிமுகப் படுத்தியவர்.
Post a Comment