2009.05.04 (16:14)
இன்று கதைத்து நீதானா?
அன்புத் தம்பி
அது நீதானா?
உனது குரல்
எனது நம்பிக்கைகளை உடைத்தது
உனது கோரிக்கை
எனது தைரியத்தைச் சிதைத்தது
எந்தப் பதிலுமளிக்காத
தொலைபேசி இலக்கமொன்றை
எம்மிடையே விட்டுப் போயிருந்தாய்
கடல்கள் தாண்டி
மலைகள் தாண்டி
ஏக்கத்துடன் திரும்பின
பல நூறு அழைப்புகள்
எல்லோரிடமும் புன்னகையை
மிதந்து போக விட்டுக் கொண்டிருக்கும்
நீ தான் இன்று
கைவிடப்பட்ட படகொன்றில்
அத்தனை பேரையும்
தவிக்க விட்டுள்ளாய்
தூர நாட்டில்
கிடத்தப் பட்டிருக்கும்
மருத்துவமனைக் கட்டிலொன்று
பிரார்த்தனைக்காக ஏந்தப் படும்
என் கரங்களுக்குள்ளே நடுநடுங்குகிறது
தனது அருளின் அரவணைப்புக்குள்
இறைவன் உனைக் காத்திட வேண்டுமென்று
உள்ளம் உருகியழுகிறது
டோஹாவின் காற்றே....மண்ணே....
நட்சத்திரங்களே..சூரிய சந்திரரே..
அற்புதங்களைப் பொதித்து வைத்திருக்கும்
மாபெரிய வானகமே...
எங்கள் தம்பி நலம் பெற்று வந்துவிட
இறைவனிடம் முறையிடுங்கள்
ரிஷா.......................ன்
உன் வருத்தங்களை
எங்களுக்குத் தந்து விட்டு
நீ எழுந்து வந்து விடு
எமது ஆரோக்கியங்களை
உன்னுடலில் வாங்கிக் கொண்டு
இன்புற்று வாழ்ந்து விடு
____________________________________-
* இதனைப் படிப்பவர்கள் ஒரு கணம்
விழிமூடி மெளமாக இருங்கள்
சகோதரன் ரிஷான் நலம் பெற வேண்டு மென்று
பிரார்த்தியுங்கள்
30 comments:
நலம் பெற பிராத்தனைகள்.
ரிஷானுக்கு என்னாச்சுன்னும் சொல்லுங்களேன்
நான் அழுது கொண்டு இருக்கின்றேன்!
நன்றி ILA
உணவின் மூலமாக ரிஷானின் உடலில் நஞ்சூட்டம் ஏற்பட்டுள்ளது.
வாருங்கள் அபி அப்பா
"நான் அழுது கொண்டு இருக்கின்றேன்!"
இங்கும் நிலைமை அவ்வாறே.
எனது எந்தப் பணியையும் செய்ய முடியாமல் அதிர்ந்து போயிருக்கிறேன்.
i'll pray for your recovery! Get well soon!
யோசிக்காதிங்க பஹீமா,
சீக்கிரம் நல்லாயிடும்...!
காலையில் செய்தி அறிந்தேன்.மனம் சரியில்லாமல் மதியம் அலுவலகத்தில் இருந்து திரும்பிவிட்டேன். அல்லாவைத் தவிர நான் யாரைக் கேட்பது??
:((
விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்! திக்கற்றவரின் பிரார்த்தனைகளை கடவுள் புறம்பே தள்ளுவதில்லை! நம்பிக்கையோடு இருப்போம்!
அன்பின் ரிஷான் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...
அக்கா ரிஷானின் தோஹா அட்ரஸ் உங்களுத்தெரிந்தால் மெயில் பண்ணுங்க.என் உறவினரை நேரில் போகச் சொல்லுறேன்.
pudukkottaiabdulla@gmail.com
ரிஷானின் உடல் நலம் பெற பிரார்த்திக்கின்றேன்
அவர் உடல் நலமடைய ப்ரார்த்திக்கிறேன்..
கண்டிப்பாக அவர் நலம்பெற்று திரும்பி வருவார்.
நலம் பெற பிராத்தனைகள்
ரிஷான் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும்.
ரிஷானுக்கு உடல் நலம் பெற்று சுகமாக இருக்க இந்த அக்காவும் பிராத்தனை செய்கிறேன்.
ரிஷான் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
நலம் பெற ப்ரார்த்திக்கின்றேன்.
ரிஷான் விரைவில் நலம் பெற நான் கடவுளிடம் வேண்டி அழுகின்றேன்
விரைவில் வருவார், நம்மிடம் பேசுவார், நம்பிக்கை வையுங்கள்
எல்லாரும் ஒரே மாதிரி நினைக்கின்றோம் இல்லையா அதுவே ரிஷானை
காப்பாற்றும்.
ஐயோ, என்ன இது!!!
தம்பி ரிஷானுக்காக என் பிராத்தனைகள்.
கவலைப்படாதிங்க ரிஷானுக்கு ஒண்ணும் ஆவது.. எங்க பிராத்தனைகள் அவனுக்கு எப்பொழுதும் உண்டு..
//உணவின் மூலமாக ரிஷானின்
உடலில் நஞ்சூட்டம் ஏற்பட்டுள்ளது.//
அடப்பாவிங்களா..யாரு செய்தது இந்த பாதக செயலை :(
மனம் பதறுகிறது.ரிஷானுக்கு என்னவாயிற்று எனக் கேட்க நினைத்தேன்.பின்னூட்டத்தில் தெரிந்தது. நானும் பிரார்த்திக்கிறேன். குணமடைவார்.
bhahima,
what happen to rishan have you got any details
thevaabira
ரிசான் பூரண நலமாக இருக்கிறா...
யாரும் வதந்திகளை நம்பாதீர்கள்.
அவரது அயலைவீட்டு நண்பர்கள் இருவரை தேடிப்பிடித்து தொடர்பு கொண்டு உண்மை விபரம் அறிந்து எழுதுகிறேன்...
He is perfectly alright.
I just spoke with his good friend & Neighbor Mr. Mafas (+974 3128316)
He said even Rishan's brother Mr.Risky Sheriff called from sri lanka & enquired about this...
Mafas told me that he met Rishan this morning. He is perfectly alright.
பஹீமாஜஹான்,
முடிந்தால் நண்பர் Mafasஐ தொடர்பு கொண்டு (+974 3128316) கதையுங்கள்
நன்றி.
சாம் முனாஸ்
கத்தார்
06 May 2009
sam_munas@yahoo.com
"what happen to rishan have you got any details
thevaabira"
வாருங்கள் தேவாபிரா
ரிஷானைப் பற்றிச்
சில தினங்களுக்கு முன்பு கிடைத்த தகவல் இது
"Mohammed Rishan is still under treatment. After 3 days in the ICU, they withdrew the breathing tube and transferred him to a ground-level bed. He is burning with fever. His skin is still blue. The doctor says he has blood poisoning. There are internal injuries too. For the pain he is drugged up most of the time. They removed some tubes from his body today morning and let him sip apple juice. They can start feeding him liquids from today I hope.
I talked with him. Its hard for him to. His voice is hoarse, and I think it hurt him to move his lips. Sometimes he talked too. Half the time I couldn't make out what he is saying. He can Hardly talk.
I spoke to Doctor a few minutes ago and he thinks he will be discharged in somedays. He is under 24 hours a day watch."
"பஹீமாஜஹான்,
முடிந்தால் நண்பர் Mafasஐ தொடர்பு கொண்டு (+974 3128316) கதையுங்கள்"
சாம் முனாஸ்
அதே தினம் நானும் ரிஷானுடன் கதைத்தேன்.
அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் சகஜ நிலைக்குத் திரும்பவில்லை.
"Mafas told me that he met Rishan this morning. He is perfectly alright"
:-(((((((((((((((
வருந்துகிறேன் சாம் முனாஸ்
உங்கள் தலையிலும் வாகாக மிளகாய் அரைத்திருக்கிறார்கள்.
அனானி,தமிழன்- கறுப்பி, எம்.எம்.அப்துல்லா,சந்தனமுல்லை, தமிழ்ப்பறவை,சென்ஷி, முத்துலெட்சுமி, நான் ஆதவன் , அமுதா, கார்த்திக், மோனிபுவன் அம்மா, விக்ணேஷ்வரன், கும்க்கி, delphine, ரம்யா, புதுகைத் தென்றல், சந்தோஷ், ச. முத்துவேல்
அனைவரின் அன்புக்கும் நன்றி.
இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு தொலைபேசியிலும் மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொண்ட ரிஷானின் நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ஆயில்யனுக்கும் நன்றி.
ரிஷானின் உடல் நிலை பற்றி அவரது வீட்டினருக்கு அறிவிக்க வேண்டாம் என்பது ரிஷானின் வேண்டுகோள்.
அவர் வீட்டாரோடு தொடர்பு கொள்ளும் வேலைகளில் அலுவலகத்தில் இருப்பதாகவே கூறி வருகிறார்.அவர்களும் அதனையே நம்புகிறார்கள். எனவே மாவனல்லையைச் சேர்ந்தவர்கள் (வெளிநாடு ,இலங்கை) ரிஷான் நலமாக இருக்கிறார் என்றே கூறி வருகிறார்கள்.
நேற்று மாலை(209.05.08) தம்பி ரிஷான் என்னுடன் தொலைபேசியில் கதைத்தார். சுமார் 5 நிமிடங்கள் கதைத்தார். அவரது குரல் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் ரிஷான் காய்ச்சலாலும் பீடிக்கப்பட்டுள்ளார். இது வரைக்கும் அவர் உணவு எதனையும் உட்கொண்டதில்லை. 5ம் திகதி வைத்தியசாலையைவிட்டுப் போக முடியும் என்று டாக்டர் கூறியிருப்பதாகச் சொன்னார். (காய்ச்சலுடனும் இருக்கிறார்)உண்மையைச் சொல்லுமாறு நான் கெஞ்சிக் கேட்டபொழுதும் வைத்திய சாலையில் இருந்து அவரது அறைக்கு வந்து விட்டதாகவே சொன்னார். அது நான் கவலைப் படுவேன் என்பதற்காகச் சொன்ன பொய்யாகக் கூட இருக்கலாம்.மிகவும் சிரமப்பட்டே ஒவ்வொரு சொல்லையும் கதைத்தார்.மிகுந்த களைப்பும் வேதனையும் அவரது குரலில் இருந்தது.
ரிஷான் நலம்பெறவேண்டும்.அதைத் தவிர வேறெந்த வேண்டுதலும் எனக்கில்லை.
மீளவும் வந்துவிட்டேன் சகோதரி ஃபஹீமா ஜஹான் !
அன்பான உங்கள் பிரார்த்தனைகளுக்கும், பிரார்த்தனைக்கென நண்பர்களை ஒருங்கிணைத்ததற்கும், இன்னும் எனக்காகப் பிரார்த்தித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்காகவும் எனது நன்றிப் பதிவு இங்கே
http://rishanshareef.blogspot.com/2009/05/blog-post.html
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.
நண்பர்கள் அனேகரின் வேண்டுகோளுக்கிணங்க விகடனில் தொடராக வெளிவரும் எனது மருத்துவமனை அனுபவங்களை http://mrishansharif.blogspot.com/2009/05/01.html இங்கு எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள் நண்பர்களே.
Post a Comment