பெருக்கெடுத்து வரும்
இருளில் நனைந்தவாறு
கற்பனைகளில் வாழ்ந்திருந்த உனை
வழியனுப்பி வைக்கிறேன்
அன்பு வழிந்தோடிய இனிய உலகத்தைச்
சுற்றியெடுத்து
எரியும் தீயிடம் தின்னக் கொடுக்கிறேன்
எல்லாம் முடிந்து போன பின்
மனதின் கருணையையும் அன்பையும்
காற்றிலே கிழித்தெறிகிறேன்
குருவிச் சொண்டுகளில் காவிச் சென்றவை
கூடுகளைக் கதகதப்பாக்கிக் கொள்ளட்டும்
யாருக்கு வேண்டுமினி
நிராகரிப்பின் வேதனைகள் ?
எப்பொழுதும் ஆறுதலையும்
அலைததும்பும் காதலையும் எடுத்துக் கொண்டு
இல்லம் மீள்வாய்
பற்றியிருக்கும் கரங்களுக்குள்
அன்பினைப் பத்திரப் படுத்தி
என் பிரார்த்தனைகளுடனும்
செல்ல மொழிகளுடனும்
புறப் பட்டுச் செல்வாய்
சமையல்காரியாகவோ
சலவைக்காரியாகவோ அன்றி
உனதுயிராகவோ அதனிலும் உயர்வாகவோ
எனைக் காத்திருந்தாய்
நேயமுடன் அரவணைத்துக் கொண்ட
நிலாப் பொழுதுகளில்
எம்மிடையே கீதமிசைத்துப் பாய்ந்தோடிய
வெள்ளியோடையின் சங்கீதத்தில்
நண்பர்கள் இலயித்திருந்தனர்
எனது முகஞ்சுழிப்பும் சிடுசிடுப்பும் மேலோங்கும்
காலமொன்றைக் கொண்டு வருவாய் என்பதை
எவருமே ஏற்காதிருந்தனர்
நினைக்கும் பொழுதெலாம்
துயர்மிகைத்திடுமோர் வலி தரும் விதி
ஏன் வாய்த்தது பேரன்பே?
சாட்சிகளை முன்னிருத்தி
வேதவசனங்களை ஒப்புவித்து
கணவனாக மாறினாய்
நீ அழைத்து வந்த பேய்களிடம்
உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்
இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத
கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்
கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த
காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு
வெளியேறிப் போய்விட்டது
எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று.....
இருளில் நனைந்தவாறு
கற்பனைகளில் வாழ்ந்திருந்த உனை
வழியனுப்பி வைக்கிறேன்
அன்பு வழிந்தோடிய இனிய உலகத்தைச்
சுற்றியெடுத்து
எரியும் தீயிடம் தின்னக் கொடுக்கிறேன்
எல்லாம் முடிந்து போன பின்
மனதின் கருணையையும் அன்பையும்
காற்றிலே கிழித்தெறிகிறேன்
குருவிச் சொண்டுகளில் காவிச் சென்றவை
கூடுகளைக் கதகதப்பாக்கிக் கொள்ளட்டும்
யாருக்கு வேண்டுமினி
நிராகரிப்பின் வேதனைகள் ?
எப்பொழுதும் ஆறுதலையும்
அலைததும்பும் காதலையும் எடுத்துக் கொண்டு
இல்லம் மீள்வாய்
பற்றியிருக்கும் கரங்களுக்குள்
அன்பினைப் பத்திரப் படுத்தி
என் பிரார்த்தனைகளுடனும்
செல்ல மொழிகளுடனும்
புறப் பட்டுச் செல்வாய்
சமையல்காரியாகவோ
சலவைக்காரியாகவோ அன்றி
உனதுயிராகவோ அதனிலும் உயர்வாகவோ
எனைக் காத்திருந்தாய்
நேயமுடன் அரவணைத்துக் கொண்ட
நிலாப் பொழுதுகளில்
எம்மிடையே கீதமிசைத்துப் பாய்ந்தோடிய
வெள்ளியோடையின் சங்கீதத்தில்
நண்பர்கள் இலயித்திருந்தனர்
எனது முகஞ்சுழிப்பும் சிடுசிடுப்பும் மேலோங்கும்
காலமொன்றைக் கொண்டு வருவாய் என்பதை
எவருமே ஏற்காதிருந்தனர்
நினைக்கும் பொழுதெலாம்
துயர்மிகைத்திடுமோர் வலி தரும் விதி
ஏன் வாய்த்தது பேரன்பே?
சாட்சிகளை முன்னிருத்தி
வேதவசனங்களை ஒப்புவித்து
கணவனாக மாறினாய்
நீ அழைத்து வந்த பேய்களிடம்
உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்
இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத
கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்
கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த
காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு
வெளியேறிப் போய்விட்டது
எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று.....
********************************************************
21 comments:
//நினைக்கும் பொழுதெலாம்
துயர்மிகைத்திடுமோர் வலி தரும் விதி
ஏன் வாய்த்தது பேரன்பே?//
ஏன்? புரியத்தான் இல்லை. என் மனநிலையைப் பிரதிபலித்த கவிதை கண்ணீரை வரவழைத்தது... வெகு அழகாக எழுதுகிறீர்கள், பஹீமா. அருமையான சொல்லாட்சி.
வாருங்கள் கவிநயா
"ஏன்? புரியத்தான் இல்லை. என் மனநிலையைப் பிரதிபலித்த கவிதை கண்ணீரை வரவழைத்தது"
ஏற்றுக் கொள்ள முடியாத வலி தான்.
ஏன் வாய்த்தது என்பது எனக்கும் புரியவே இல்லை. அன்பு செலுத்திய பாவத்துக்கான தண்டனைஇது .வேறென்ன சொல்வது?
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.நன்றி கவிநயா.
//சாட்சிகளை முன்னிருத்தி
வேதவசனங்களை ஒப்புவித்து
கணவனாக மாறினாய்
நீ அழைத்து வந்த பேய்களிடம்
உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்
இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத
கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்
கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த
காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு
வெளியேறிப் போய்விட்டது
எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று.....//
யாருடைய அனுபவங்கள் இவை?
வேதனையை பிரதிபலிக்கும் வார்த்தை பிரயோகம்...கவிதைகளை உணர்ந்து அனுபவித்து ரசிப்பதற்கென்று தனி மனநிலை தேவை.
இந்த வீடியோவை பாருங்களேன்...
இஸ்லாத்தின் பார்வையில் காதல்
//நினைக்கும் பொழுதெலாம்
துயர்மிகைத்திடுமோர் வலி தரும் விதி
ஏன் வாய்த்தது பேரன்பே?
சாட்சிகளை முன்னிருத்தி
வேதவசனங்களை ஒப்புவித்து
கணவனாக மாறினாய்
நீ அழைத்து வந்த பேய்களிடம்
உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்
இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத
கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்
கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த
காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு
வெளியேறிப் போய்விட்டது
எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று.....//
பெரும்பாலான காதல் திருமணங்கள் கல்யாணத்தின் பின் தோல்வியைத் தழுவுவதன் துயரங்களைக் கவிப்படுத்தியிருக்கிறீர்கள் சகோதரி.
உண்மைக்காதலின் போது சேருவோமா? என்ற தவிப்பு மேலோங்கி மிகுந்த அன்பாக வெளிப்படும்.ஆனால் அது கல்யாணத்தில் முடிந்ததன் பிற்பாடு
எனக்கானவள்/ன் ஆகிவிட்டாள்/ன் என்ற அலட்சியம் இடையில் சுவராக எழுந்துநிற்கும்.
உங்கள் கவிதை அவ்வாறான வலியை உணர்பவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் ஜோடிகளுக்கு காண்பிக்கப்படவேண்டியவை.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி.
அன்புத்தோழி..
உங்கள் கவிதைகள் அருமையாக உள்ளன.. இருந்தும் இழையோடும் சோகம் இதயத்தை வலிக்க செய்கிறது..
எப்படியும் வாழ்த்துதானே ஆக வேண்டும்.. அதையே மகிழ்ச்சியாய் சிரித்தபடியே செய்துவிடலாமே...
கொஞ்சம் சோகத்திலிருந்து மீண்டுவந்து மகிழ்ச்சியாய் எழுதுங்களேன்..
இது அன்புத்தோழனின் வேண்டுகோள்.. தவறு இருப்பின் மன்னிக்க..
இறுதிவரிகள் என்னை மிகவும் பாதித்தன தோழி..
சேர்வோமா என்று விரும்பிய காதல் சேராமல் போவது ஒரு துயரென்றால்...சேர்ந்தும் சோர்ந்து போவது மறுதுயர். இவ்விதி பெண்களுக்கு மட்டுமே சதியாவதால்தானோ என்னவோ மனைவிக்குச் சதி என்று பெயர். எத்தனை தலைமுறை மாறினாலும் மனைவியை சமையலறைக்குள்ளேயும் அழுக்குத் துணிகளுக்குள்ளும் பாத்திரங்களுக்கும் பதிப்பதால்தானோ என்னவோ கணவனுக்குப் பதி என்று பெயர்.
சகோதரி...உங்கள் கவிதை நல்ல வெளிப்பாடு.
வாருங்கள் முகவைத்தமிழன்
"யாருடைய அனுபவங்கள் இவை?
வேதனையை பிரதிபலிக்கும் வார்த்தை பிரயோகம்..."
இந்த அனுபவம் யாருக்கும் நிகழ்ந்துவிடக் கூடாதென்று பிராத்திப்போம்.
உங்கள் கருத்துப் பதிவுக்கு நன்றி.
மீண்டும் வாருங்கள்.
வாருங்கள் ரிஷான்
பெரியவரே.... :)
"உண்மைக்காதலின் போது சேருவோமா? என்ற தவிப்பு மேலோங்கி மிகுந்த அன்பாக வெளிப்படும்.ஆனால் அது கல்யாணத்தில் முடிந்ததன் பிற்பாடு
எனக்கானவள்/ன் ஆகிவிட்டாள்/ன் என்ற அலட்சியம் இடையில் சுவராக எழுந்துநிற்கும்."
ரொம்பவும் அனுபவசாலியாகப் பேசுறீங்க.
நீங்கள் எனது கவிதைகளோடு இணைந்திருப்பது தான் இடுகையைப் புதுப்பிக்கத் தூண்டுதல் தருகிறது.
நன்றி.
வாருங்கள் gokulan
"எப்படியும் வாழ்த்துதானே ஆக வேண்டும்.. அதையே மகிழ்ச்சியாய் சிரித்தபடியே செய்துவிடலாமே..."
ஆமாம். ஏற்றுக் கொள்கிறேன்.
"கொஞ்சம் சோகத்திலிருந்து மீண்டுவந்து மகிழ்ச்சியாய் எழுதுங்களேன்.."
பார்ப்போம்.
உங்கள் அன்புவேண்டுகோளில் தப்பே இல்லை.
நன்றி நண்பரே.
வாருங்கள் g.ragavan
"இவ்விதி பெண்களுக்கு மட்டுமே சதியாவதால்தானோ என்னவோ மனைவிக்குச் சதி என்று பெயர். எத்தனை தலைமுறை மாறினாலும் மனைவியை சமையலறைக்குள்ளேயும் அழுக்குத் துணிகளுக்குள்ளும் பாத்திரங்களுக்கும் பதிப்பதால்தானோ என்னவோ கணவனுக்குப் பதி என்று பெயர்."
உங்கள் சதி-பதி விளக்கம் அருமை.
ஒரு பெண் மனைவியாகும் பொழுது அவள் அதுவரையும் வாழ்ந்த வந்த உலகத்தைக் கைவிட வேண்டியுள்ளது.அதைச் செய்யாத பெண்ணின் வாழ்க்கை மிக மோசமாகத் தண்டிக்கப் படுகிறது.ஆணுக்கு இந்த நியதிகள் இல்லையே..
ராகவனின் சதி, பதி விளக்கம் அருமை.
'பெரியவர்' அனுபவபூர்வமா அழகா பேசறார், வழக்கம் போல :)
//ஒரு பெண் மனைவியாகும் பொழுது அவள் அதுவரையும் வாழ்ந்த வந்த உலகத்தைக் கைவிட வேண்டியுள்ளது.அதைச் செய்யாத பெண்ணின் வாழ்க்கை மிக மோசமாகத் தண்டிக்கப் படுகிறது//
உண்மை! உண்மை!! உண்மை!!!
அக்கா இது எந்த முகஸ்துதிக்காகவும் சொல்லவில்லை. சிலரின் கவிதைகளை படிக்க எனக்கு பிரத்தியேக மனநிலை தேவை. ஆனால் உங்களின் கவிதை அப்படியில்லை. எப்போதும் வாசிக்கின்றேன். உண்மையை சொன்னால் நான் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்று உங்களை பார்த்து பார்த்து ஆச்சரியப்படுகின்றேன்.
பஹீமா..உங்களின் இந்த கவிதை என் வாழ்க்கையின் வெளிப்பாடு...
சகோதரன் ரிஷான் உங்க வலைப்பூவை அறிமுகப்படுத்தினார்....
அருமையான கவிதைகள்...
சோகத்தை வென்று வெற்றி களிப்புடன் வாழ வாழ்த்துகள்.....
அன்புடன்
நட்சத்திரா...
அன்பின் கவிநயா
உண்மைகளை உணர்ந்து ஆமோதித்திருக்கிறீர்கள்.
"'பெரியவர்' அனுபவபூர்வமா அழகா பேசறார், வழக்கம் போல :)"
ஆமாம்.
அவர் வர வர மிகவும் பெரிய ஆளாகிக் கொண்டு போகிறார்.7 கிழவரின் அனுபவத்துடன் அவரிருக்கிறார்.நாங்கள் தினமும் அவரிடம் கற்க வேண்டியிருக்கு :)
வாருங்கள் கோசலன்
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்திருக்கிறீர்கள்
"உண்மையை சொன்னால் நான் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்று உங்களை பார்த்து பார்த்து ஆச்சரியப்படுகின்றேன்."
தம்பி இதுக்கெல்லாம் விஷேட தகுதியெதுவும் தேவையில்லை.கொஞ்சம் பட்டுத் தெளிந்தால் போதுமப்பா :(
வாருங்கள் நட்சத்திரா
"பஹீமா..உங்களின் இந்த கவிதை என் வாழ்க்கையின் வெளிப்பாடு..."
இனி யாருக்கும் இப்படியொரு வாழ்க்கை அமைந்துவிடக் கூடாதென்று பிரார்த்திப்போம்.எந்தப் பெண்ணுக்கும் காதலின் பெயரால் ஒரு நரகம் வாய்த்திட வேண்டாமே
"சகோதரன் ரிஷான் உங்க வலைப்பூவை அறிமுகப்படுத்தினார்...."
ரிஷானின் இந்தச் சேவைக்கு நன்றி.
உங்கள் வருகைக்கு நன்றி நட்சத்திரா
அன்பின் சகோதரி பஹீமா,
நான் அஸ்பர்..கவிதைகளை வாசித்தன்.
நன்றாக இருந்தது..அதைப்பற்றி எனக்கி சொல்ல
தெரியல்ல..அவ்வளவுக்கு நான் இன்னம்
பக்குவப்படல்ல..எனக்கி எல்லாரையும் போல
கவிதைத்தனமா சொல்ல தெரியா...ஆனா நல்லா
இருந்தது..நான் ஒரு கருவ வச்சி யோசிச்சன்
அது கவலையா இருந்தது...
இன்னம் ஒரு விசயம்..நீங்க இந்த தளத்தில
ஒங்குட மின்னஞ்ஞல் முகவரிய சேத்திருக்கலாம்..
நீங்க கேக்கலாம்,comments பகுதி மூலம் நீங்க
கருத்துக்கள சேர்க்கலாமே என்டு...அதுக்காக இல்ல
நான் என்னுடைய பதிவுகள உங்களுக்கு அறிமுகப்டுத்தலாம்
என நினச்சன் அது என்னால முடியாம பெய்த்து..
இப்பிடி நினச்ச எத்தனயோ ஆக்களுக்கு அது
எட்டாக்கனியாத்தான் போயிருக்கும்..வழர்ந்தவர்கள்
அல்லது அனுபவசாலிகள் புதியவர்கள அறிந்து
கொள்ள வேணும் என்டு நினக்கிறது பிழையில்ல
தானே.......கூவித்திரியுறான் என்டு நினக்கொனாம்
அறிமுகப்படுத்தல் அல்லது சந்தைப்படுத்தல் என
நினக்கலாம்...புதுசா வாறது ஒன்டும் நமக்கு கனவில
அறிவிக்கபர்ரல்லானே...சந்தைப்படுத்தல் என்கிறது
வர்த்தக நோக்கத்துக்கும் இருக்கலாம் சமூகம்
சார்ந்ததாகவும் இருக்கலாம்....
கடுமையா ஏதும் வார்த்தைகள் பாவிக்கப்பட்டிருந்தால்
மன்னிங்கோ...எல்லாத்தையும் comments படுதியில
சேர்க்கயேலா தானே.....
சந்திப்பம்.....
இகலப்பை இல்லாமல் பின்னூட்டம் போடுகிறேன். என்ன சொல்லலாம் என்று தெரியேல்ல நாங்களும் உங்கட கவிதைகள் விடாம படிக்கிறம் அதுகளைப் பற்றி எழுதுற தகுதி எங்களுக்கு இல்லாததால பார்த்திட்டு ஒரு பெருமூச்சோட போறம் வேறென்ன. கவிதையின் அனுபவத்தை விழுங்கிக்கொண்டு சிலவேளைகளில் வலிதரும் மனதை உங்கள் கவிதைச் செண்டுகளால் தடவிக்கொண்டும்......... பிறகு ஒரு சொந்தப்பிரச்சினை என்ர பெயர் த.அகிலன் என்ர மெயில் ஐடி நினைவிருக்குத்தானே
வாருங்கள் அஸ்பர்
"நான் ஒரு கருவ வச்சி யோசிச்சன்
அது கவலையா இருந்தது..."
என்னவென்று சொல்லியிருக்கலாம் .
உங்கள் வருகைக்கு நன்றி.
மின்னஞ்சல்
jahan.faheema@gmail.com
வாருங்கள் அகிலன்
நீண்ட இடைவெளியின் பின்னர் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்.
"பிறகு ஒரு சொந்தப்பிரச்சினை என்ர பெயர் த.அகிலன் என்ர மெயில் ஐடி நினைவிருக்குத்தானே "
(இப்படித்தான் இன்னொரு "பெரியவர்" கூட தொலைபேசியில் தனது பெயரைக் கூறி நினைவிருக்கிறதா? எனக் கேட்கிறார்.)
உங்களுக்கு நீண்....................ட மெயில் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பதால் அது சாத்தியமற்றுப் போய்விடுகிறது.
தொடர்பு கொள்ளாவிட்டாலும் "சொந்தப் பிரச்சினைகளை" நினைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். அண்மையில் நல்லபடியான ஒரு தொலைபேசி அழைப்புக் கிடைத்தது.அது ஓரளவு நிம்மதியைத் தந்தது.
Post a Comment