நெடுங்காலத் தாமதத்தின் பின்
இப்போது அழைக்கிறாய்
எந்த மன்னிப்புமற்ற வியாக்கியானங்களோடு
பதுங்கிப் பதுங்கி வந்திருக்கிறாய்
முதன் முறையாக உன்னை எறிந்தேன்
இதயத்திலிருந்து சாக்கடைக்கு
மாசுற்றவைகளைத் தூக்கியெறிந்திட
இரு தடவைகள் சிந்தித்ததேயில்லை நான்
தூமகேது மறைந்து போன இடத்தில்
இருள் கவிகிறது
ஆதியில் இடப்பட்ட வழியொன்றினூடாக
தேடிப் போக முடியாத நிலவு
தேய்ந்து தேய்ந்து நகர்கிறது
இருளொன்றின் உள்ளேயிருந்து
அன்பானவளே என்கிறாயா?
எந்த அறிமுகமுமற்றவளாக
இக்கணத்தில் உனைக் கடக்கிறேன்
சொல்
அன்பானவனாக இருந்தாயா?
வேலிகளையுடைத்து
உனது ஓடைகளில்
அவமான நீர் புகட்டிட அழைத்தபோதும்
தாரை வார்த்துத் தந்திட
எவருமே முன்வராத வாசலொன்றில்
தாகித்துக் கிடந்தவளைக்
கைவிட்டுச் சென்ற போதும்
அன்பானவனாக இருந்தாயா?
எனக்கும் உனக்குமான உலகின்
கடைசிவாசலையும் மூடி
முத்திரையிட்டாயிற்று
அந்தப் பிசாசை இருகூறாக்கி
நெஞ்சத்து சீசாக்களில் அடைத்தாயிற்று
இனி நடந்தேறும் படியான
மங்களங்கள் எதுவுமற்ற இந்நாளில்
எழுதிமுடித்திடாத பாடலொன்றை
நினைவு படுத்துகிறாய்
இறுதி வரிகளுக்கான இசையை மாத்திரம்
உன்னிடம் தருகிறேன்
உன்னால் நான் நனைந்த மழை
அது தான் இறுதியில்
நோயையும் விட்டகன்றது
22 comments:
மனதின் ஆழ்துளையொன்றிலிருந்து வெளிக்கிளம்பியிருக்கிறது கவிதை. மிகச் சன்னமாகத் தன் முடிவை உரக்கப்பாடுகிறது. துரோகத்தின் பழிச் சொல்லை ஏந்திய உள்ளங்களுக்கு வரவேண்டிய தைரியத்தைப் போதித்தபடியே அழகுற நிற்கிறது கவிதை.
//முதன் முறையாக உன்னை எறிந்தேன்
இதயத்திலிருந்து சாக்கடைக்கு
மாசுற்றவைகளைத் தூக்கியெறிந்திட
இரு தடவைகள் சிந்தித்ததேயில்லை நான்//
எல்லோர்க்கும் வந்திடவேண்டும் இதே தைரியமும், எண்ணமும்..சுயத்தினை எவனோ ஒருவனின் சுயநலம் சுடும்போதினில்..!
கவிதை அருமை சகோதரி :)
உறவுகள் முடிந்து விட்டாலும் உணர்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. காலம்தான் அவற்றை நிறுத்தி முடித்து வைக்க வேண்டும் போல் இருக்கிறது. ஆழ் உணர்வுகளின் அருமையான வெளிப்பாடு, பஹீமா.
:-(((
நல்லாயிருக்கு.
ஒரு சோகத்தை, காயத்தை சொல்லும் கவிதை தந்தும் போகிறது.
உங்கள் மொழி நடை பிரம்மாதமாக இருக்கிறது.
வாங்க ரிஷான்
இம்முறையும் வலையேற்றியவுடனேயே வந்திருக்கிறீர்கள்.
"முதன் முறையாக உன்னை எறிந்தேன்
இதயத்திலிருந்து சாக்கடைக்கு
மாசுற்றவைகளைத் தூக்கியெறிந்திட
இரு தடவைகள் சிந்தித்ததேயில்லை நான்"
இந்த வரிகள் உங்களைக் கவர்ந்திருப்பதற்கான நியாயங்கள் அதிகம். உங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியிருப்பதன் மகிழ்ச்சி தெரிகிறது.
உங்களுக்கு நன்றி.
வாருங்கள் கவிநயா
"உறவுகள் முடிந்து விட்டாலும் உணர்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. காலம்தான் அவற்றை நிறுத்தி முடித்து வைக்க வேண்டும் போல் இருக்கிறது"
நீங்கள் செல்வது மிகவும் சரி.காலம் அனைத்துக் காயங்களையும் ஆற்றவேண்டும்,
புரையோடிப்போனவைகளையும்...
வாங்க முபாரக்
":-((("
ஏன் ஏன் நீங்க இப்போ அழுறீங்க???
(இவள எந்தக் காலத்துலயும் திருத்த முடியாதுன்னு முணுமுணுப்பது கேட்குது)
வாங்க ஆடுமாடு,
நீங்க இப்ப அடிக்கடி இந்தப் பக்கம் வந்து போவது மகிழ்ச்சிதருகிறது.
நன்றி.
//எனக்கும் உனக்குமான உலகின்
கடைசிவாசலையும் மூடி
முத்திரையிட்டாயிற்று
அந்தப் பிசாசை இருகூறாக்கி
நெஞ்சத்து சீசாக்களில் அடைத்தாயிற்று//
இதைவிட ஒரு தீர்க்கமான முடிவை சொல்லுதல் கடினமென்றே தோன்றுகிறது..
//உன்னால் நான் நனைந்த மழை
அது தான் இறுதியில்
நோயையும் விட்டகன்றது//
உங்கள் வலைத்தளம் அழகாக இருக்கிறது..
:)
வாங்க saravana kumar
இந்தப் பக்கத்துக்கு முதன் முறையாக வந்து உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
நன்றி.
அப்பாடா வாசிச்சிட்டன்.
அக்கா வணக்கம், நான் அருள்நேசன் சொல்லாம வந்தா என்னையும் தூக்க்கி சாக்கடையில எறிங்சிட்டா
அப்படித்டான் நினைத்து ஒரு இரண்டடி போனேன். அருமை அக்கா. இப்படி ஒரு கவிதை பார்த்து வருடங்களாகிற்று. இது முகத்துதி இல்ல, எதோ எனக்குளும் புரளும் எதோ ஒண்றாகப்பட்டது.
அக்கா நல்ல அன்பானவ, அகிலன் அடிக்கடி சொல்வான். பேசிப்பார் என்பான். அதுதான் வாசல் தேடி வந்திட்டன்.
'மூன்றாவது மனிதன்" முகம் பார்த்திருக்கிறேன். நீங்கள் ஒரு ஆசிரியை, என்று அகிலன் சொல்வான்.
நான் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன், கொஞ்ச நாளாகத்தான் BLOGER பயன்படுத்துகிறேன்.
இன்னும் பேசலாம், வரட்டா அக்கா
வாருங்கள் தம்பி அருள்
நீங்களும் அகிலன் வட்டத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
(உங்களுடைய முதல் பின்னூட்டத்தைப் பார்த்தபோதே நினைத்தேன். அகிலனுடன் தொடர்புடைய ஒருவராக இருக்கலாம் என்று)
"நான் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன்"
மகிழ்ச்சி.
ஆனால் கடந்த மாதங்களில் அங்கு நடந்த கெடுபிடிகளால் பாதிப்படைந்திருப்பீர்கள் என்பதை நினைக்கும் பொழுது தான் "விதியே விதியே மூட விதியே ......" என்று சொல்லத் தோன்றுகிறது.
"இன்னும் பேசலாம், வரட்டா அக்கா"
வாங்கோ வாங்கோ
உங்கள் கவிதை அருமை
மகேந்திரன்
//ஆடுமாடு said...
நல்லாயிருக்கு.
ஒரு சோகத்தை, காயத்தை சொல்லும் கவிதை தந்தும் போகிறது.//
ஆடுமாடு சொன்னதையே நானும் சொல்லவிழைந்தேன்.
வாருங்கள் மகேந்திரன்
உங்கள் வருகை மகிழ்ச்சிதருகிறது
வாருங்கள் கானா பிரபா
"ஆடுமாடு சொன்னதையே நானும் சொல்லவிழைந்தேன்"
:)
நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்திருக்கிறீங்க.
உங்கள் வரவையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்
உன்னால் நான் நனைந்த மழை///
உங்கள் வரிகளை மீளவும் மீளவு என்க்குள் மீட்டிக் கொள்வதைத் தவிர்த்து வேறேதும் எழுத முடியவில்லை. பல இடங்களில் பொருத்தியும் எதிரே நிறுத்தியும் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன் உங்கள் வரிகளால்.
வாருங்கள் சோமி
" பல இடங்களில் பொருத்தியும் எதிரே நிறுத்தியும் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன் உங்கள் வரிகளால்."
ம் ம்
பாதிக்கப் பட்டிருக்கீங்க தான்.
எல்லாம் முடிந்த பின்னர் வருகின்ற ஞானம் எவருக்கு உதவப் போகிறது?
உங்கள் வருகைக்கு நன்றி.
vdf;Fk; cdf;Fk; khd cyfpy;
filrp thriyAk; %b
Kj;jpiu ,l;lhapw;W
mej; gprhir (fhjy; gprhirah?)
,U $whf;fp neQ;rj;J rPrhtpy;
(,d;Dk; me;j rPrhit neQ;rpy; Vd;
itj;jpUf;fpwph;fs; ntspNa vLj;jJ tpLq;fNsd;)
milj;jhapw;W (vd;d Nfhgk;)
mw;Gjkhd cs;s ntspghL
thh;j;ij rpyk;gk; mUik - njhlUq;fs; - tho;j;Jfs;
md;Gld; - uh[h fkhy;
"எனக்கும் உனக்குமான உலகின்
கடைசிவாசலையும் மூடி
முத்திரையிட்டாயிற்று
அந்தப் பிசாசை (காதல் பிசாசையா?)
இருகூறாக்கி
நெஞ்சத்து சீசாக்களில்(இன்னும் அந்த சீசாவை நெஞ்சில் ஏன் வைத்திருக்கிறீர்கள்.வெளியே எடுத்து விடுங்களேன்) அடைத்தாயிற்று
(என்ன கோபம்)
அற்புதமான உள்ள வெளிப்பாடூ வார்த்தை சிலம்பல் அருமை-தொடருங்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன் -ராஜா கமால்"
வாருங்கள் ராஜா கமால்,
"அந்தப் பிசாசை (காதல் பிசாசையா?)"
ஆமாம் காதல் பிசாசைத் தான்.
"இன்னும் அந்த சீசாவை நெஞ்சில் ஏன் வைத்திருக்கிறீர்கள்.வெளியே எடுத்து விடுங்களேன்"
தவறுதான்.அது நெஞ்சில் வைத்துக் கொண்டிருக்கக் கூடிய திரவியம் இல்லைத் தான்.அதையும் தூக்கி எறிந்தாப் போச்சு :)
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
//எனக்கும் உனக்குமான உலகின்
கடைசிவாசலையும் மூடி
முத்திரையிட்டாயிற்று
அந்தப் பிசாசை இருகூறாக்கி
நெஞ்சத்து சீசாக்களில் அடைத்தாயிற்று//
அரேபிய இரவுகளில் வரும் ஜி்ன் - ஜீனியாக்கள் பாதிப்பா? முத்திரையிடப்பட்ட சீசா?
உங்களுக்குமா? கவிஞர்கள் எல்லோருக்கும் இது பொது அனுபவமா? இருந்தாலும் இருதடவை யோசிக்காமல் தூக்கி எறிவதற்கு முன்பாக, ஒரு தடவை நிதானமாக யோசித்திருக்கலாமோ முன்பே?
//உன்னால் நான் நனைந்த மழை
அது தான் இறுதியில்
நோயையும் விட்டகன்றது//
என்ன நோயிது?
நண்பர் முபாரக்கை ஒட்டி :-( ..
Post a Comment