முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன
தனது குழந்தைகளுக்காக
எடுத்துச் செல்லும் கனிகள்
ஒவ்வொன்றாக அழுகுவதை
ஏக்கத்துடன் தூக்கியெறிகிறாள்
அன்பை
நிம்மதியை
மாபெரும் கருணையொன்றை
தன்னோடு எடுத்துச் செல்லக்
காத்திருக்கிறாள்
ராஜாக்களின் அரசியல்
அவள் வீட்டைச் சிதைத்தது
அதிகாரம் கொண்ட கழுகொன்று
அவளது புத்திரரைக் கெளவிப் பறந்தது
சித்தம் பிசக வைத்த
இரக்கமற்ற குரலொன்று
அவளைத் தெருவெங்கும் ஓடவைத்தது
இன்று...
கின்னரர் தம் இசையிழந்த
நிலமெங்கும்
அவளது ஒப்பாரி அலைகிறது
அரசனைத் துதிபாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டொழிகிறது
(நன்றி: "எதுவரை" இதழ்-2)
10 comments:
முறைப்பாடுகளை ஏற்காமல் வெளியே துரத்தும் காவலரண்கள் வாய்த்திட்டால் தேசத்தில்
//அரசனைத் துதிபாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டொழிகிறது//
மாணடொழிவது, மாண்டழிவது சாத்தியம்தான்.
வழமை போலவே கவிதை அருமை !
//முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன//
வெகு அழகான பிரயோகம்.
அருமையான கவிதை
வாருங்கள் ரிஷான்,
"முறைப்பாடுகளை ஏற்காமல் வெளியே துரத்தும் காவலரண்கள் வாய்த்திட்டால் ......
மாண்டொழிவது, மாண்டழிவது சாத்தியம்தான்"
இந்த தேசத்தின் மீது கவிழ்ந்திருக்கும் சாபம் அதிலிருந்து தானே தொடங்குகிறது.
வாருங்கள் கவிநயா,
"வெகு அழகான பிரயோகம்"
:(
இது தான் இங்குள்ள நிஜம்.
காவலரண்கள் தான் மக்கள் மீதான துயரங்களை ஏவிக்கொண்டிருக்கின்றன.
வாருங்கள் Azeez Nizardeen அவர்களே,
தங்களது முதல் பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி.
நல்ல கவிதை...
பொறுத்தமான டெம்பிலேட்.. தொடரட்டும் பணி
வாருங்கள் Hisham Mohamed,
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.
நன்றி.
http://mahendran-marie.blogspot.com/
mariemahendran
Post a Comment